Wednesday, 19 May 2010

எதை? எப்படி?




வலைப்பூ தொடங்கி இன்றோடு இரண்டு நாட்கள் ஆகின்றன. எதுவும் பதிவிட வில்லை இதுவரை. சொல்லப்போனால் என்ன பதிவிடலாம் என்ற கேள்வியே மேலோங்கி இருக்கிறது. இதை தவிர, என்ன நடையில் வீணை வாசிக்கலாம் என்ற குழப்பமும்...

உரை நடையா, பேச்சு வழக்கா, கிண்டல் தொனியிலா... எப்படி என்று இதுவரை தோன்றவில்லை. சரி போகட்டும்...முதலில் என்ன எழுதலாம் என்று முடிவாகட்டும்.!

Mind Ruler களால் 'ஆம்' என்றும், Heart Ruler களால் 'இல்லை' என்றும் நம்பப்படும் பிரபாகரன் மரணம் 'நிகழ்ந்த' மர்ம நாளில் வலைப்பூ துவங்கியதால் அது குறித்து?

முள்ளி வாய்க்காலில் ஓராண்டுக்கு முன் நடந்த படுகொலைகளை பற்றி?

சரி, நமக்கென்ன தகுதி இருக்கிறது? இதை பற்றியெல்லாம் எழுத.. அங்கு ஊரே பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாமெல்லாம் இங்கு கிரிக்கெட் மேட்ச் பார்த்து கைதட்டிக் கொண்டிருந்தவர்கள் தானே...

'சம்பவம்' நடந்து ஓராண்டுக்குப் பின்னும் அதைப் பற்றி நினைக்க, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த நேரமில்லை நமக்கு... சக தமிழினம் எங்கு அழிந்தால் என்ன? என் வீட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்.

டைட்டில் மாத்துங்கப்பா...

சரி, நிகழ்காலத்திற்கு வருவோம்...

  • 'எவன் ஜெயித்தால் எனக்கென்ன?' என்ற ரீதியில் வெஸ்ட் இண்டீஸ்-ல் ஊர் சுற்றி விட்டு வந்த நம்ம மட்டையடி மன்னர்கள் பற்றி...
  • ஊடகத் துறையினரால் புறக்கணிக்கப்பட்ட ஆனந்தின் 4 வது சாம்பியன் பட்டம் பற்றி...
  • அஸ்லான்-ஷா கோப்பை இறுதி வரை வந்த ஹாக்கி அணி பற்றி...
  • இந்திய அரசியலை தடி கொண்டு தாங்கி 'நிற்கும்' தாத்தாக்களைப் பற்றி...
  • நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போகும் நவீன வாரிசுகள் பற்றி...
  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அக்னி-2 பற்றி...
  • மாவோயிஸ்ட் Vs அரசாங்கம். உண்மையில் என்ன தான் நடக்கிறது? பற்றி...
  • அண்மையில் பார்த்த இரும்பு கோட்டை பற்றி...

எதைப் 'பற்றி' என்பது 'பற்றி' எரிகிறது எனக்குள்.

உள்ளூர்.. வெளியூர்...
அகம்... புறம்...
நல்லது... கெட்டது...
பார்த்தது... படித்தது...

எண்ணம்... செயல்... ஆசை...
கவிதை.. கதை... காதல்..
மழை... முகில்... தாழ்வாரம்...
எதைப் பற்றி எழுத முதல் பதிவில்...

குழப்பங்கள் தீரவில்லை இன்னும். ஆனாலும் ஏதாவது எழுதணும் சார் !!