Wednesday, 9 March 2011
நீ என்ன வேண்டும் எனக்கு?
நீ என்ன வேண்டும் எனக்கு?
உன்னைப் பார்த்தாலே மனசுக்குள் ஏதோ துளிர்க்கிறது.
பார்க்காதபோதோ பார்க்கவேண்டும் போல் ஆகிறது.
நாம் பேச நேரிட்டாலோ - பேசிப் பிரிந்த பின்பும்...
என்ன பேசினோம் என யோசித்து யோசித்தே காலம் கரைகிறது.
நீ என்னதான் வேண்டும் எனக்கு?
நமக்குள் என்ன இருக்கிறது?
நட்பா...?
"ஒண்ணு கேட்டா கோச்சுக்கக் கூடாது"
இப்படியாகத் தொடங்கும் நம் பெரும்பான்மையான உரையாடல்களில்
உன் நாசியைப் போலவே -
தலைகீழாய் தொங்கும் வினாக்குறியாய் தவிக்கிறது நட்பு.
காதலா...?
நாமிருவரும் எதிர்பாலர்கள் என்ற
ஒரு காரணம் மட்டுமே தீர்மானிக்க முடியாத
பிறழ்ந்த அலைவரிசையாய்
உன் நெற்றிச் சுருக்கங்களில் சடுகுடு ஆடுகிறது காதல்.
ம்ம்.
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...
சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?
அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment