Saturday, 19 February 2011

தவறவிட்ட பொக்கிஷ நாட்கள்


சில மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலம் திரும்பியிருக்கிறேன். தவறவிட்ட நாட்கள் பொக்கிஷமாய் இப்போது தோன்றுகின்றன. இடைப்பட்ட பொழுதுகளில் எழுத நினைத்த தலைப்புகள் ஏராளம்.

ஆனால் எழுத தீர்மானிக்கும் நொடி வசப்படாமலே போனது. ஏன் என்பதை சொல்லமுடியுமா யாராவது?? கற்றை கற்றையாய் நூல்களும், எழுத்துக்காரர்களும் தோன்றும் எழுத்துலகில் யாருக்குமே விடை தெரியாத இந்த கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.

சுவற்றைப் பிடித்து நடக்க முயலும் ஒரு குழந்தையைப் போல எழுத்து நதியின் கரையோரமாய் நாம் ஒரு காலூன்ற முயல்கிறேன். கற்பனைச் சிறகுகளுக்கு கவிதை வடிவில் வண்ணம் கொடுக்க முடிகிறது. ஆனால், எதார்த்த உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் வண்ணம் பூசும் லாவகம் கைகூடி வரவில்லை.

இப்படித்தான்...

உள்ளே கிடக்கிறது ஓராயிரம் எண்ணங்கள்.
உடைந்து போயிருக்கும் உள்மன வண்ணங்கள்.
எழுத்தாய் உருமாற்ற ஏனோ தயக்கம்.
நினைத்தவுடன் எழுதாமல் தள்ளிவைக்கும் மயக்கம்.

அன்றாட அலுவல்கள். அதனூடே பல செயல்கள்.
அவற்றாலான களைப்புடன் தூங்கிப்போகும் நினைவுகள்.
மனதின் அலைக்கழிப்புகளில் அயர்ச்சியாய் உணர்கிறேன்.

துடிப்பான நேரங்களில்s வேறு செயல்பாடுகள் என்று தொடர்ச்சியாய் என்னை அபகரிக்கும் வேளைகளில், எழுதும் நேரங்களை முற்றிலுமாய் தொலைத்துவிடுகிறேன்.

மொத்தத்தில் நான் சோம்பலில் திளைத்ததுதான்
பதிவுலக இடைவெளிக்கு காரணம். இனி நிகழாது இதுபோல்.




கைவசம் இருக்கு
கொஞ்சம் சரக்கு.
ஆர் யு ரெடி???






No comments: