Thursday, 31 March 2011

கடல் - காதல் - நான்



நுரைதளும்பும் அலைகடலோரம்
காற்றுவாங்கப் போனேன்.
காலாற நடக்கையில்
கண்ணில் தென்பட்டனர் காதலர் பலர்.

காதலனைப் பார்த்தும் -
காதலியைப் பார்த்தும் -
காறித்துப்பியது கடல்!

அலைபூக்கள் வீசி ஆசீர்வதிப்பாயே...
நீயா -
எச்சில் துப்பி இழிவு செய்கிறாய்?
ஆதங்கத்தோடு கேட்டேன் ஆழியிடம்.

கனன்ற கதிரவனை
கனலாய் எதிரொளித்துக் கொண்டே
பேரிரைச்சலாய் -
மறுமொழி பகன்றது அலைமடி!

இவன் -
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு காதலியோடு,
நான்கைந்து வாரமாய்
நான்கைந்து காதலியோடு வந்தான்!

இவள் -
ஒவ்வொரு காதலனோடு
நான்கைந்து நாளாய் வருகிறாள்!

இடிந்துபோனேன் நான்!
அலைகடலே...
நுரை தாயே...
உன்னிடம் ஒரு கோரிக்கை!

கொஞ்சம் இங்கே வா!
எனக்காக -
இன்னுமொருமுறை
அந்த நாய்கள் மீது எச்சில் துப்பு!

6 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வார்த்தைகள், வரிகள் அனைத்துமே அருமை பாரட்டுக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை தொடர்ந்து எழுதுங்கள் சிசு..
Word Verification நீக்கிவிடுங்கள் கொமண்ட் இடுவது சிரமமாக இருக்கும்

சிசு said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தமிழ்த்தோட்டம்...

சிசு said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி...

Word Verification நீக்கிவிட்டேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி.

நிலாமதி said...

இத்தகைய அக்கிரமங்கள் கண்டு தான் சுனாமியாய் சீறுகிறதோ?
நன்றி தங்கள் பதிவுக்கு.

சிசு said...

நன்றி அக்கா..