Thursday 19 July 2012

ஏனோ உறக்கமில்லை எனக்கு...
கருக்கிருட்டு தர்பார் நடத்தும்
அர்த்தஜாம வேளை.
ஏனோ உறக்கமில்லை எனக்கு...

நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகிறேன்
உன் நினைவோடு!

முடிக்கும்முன்பே
விடிந்துவிட்டது பொழுது.
அதனாலென்ன...?

மொட்டைமாடியில்
இன்றும் எண்ணுவேன்
நட்சத்திரங்களோடு  உன்னையும்...!Thursday 12 July 2012

வார்த்தையை கண்டுபிடியுங்களேன்!!!

 
இது ஒரு மூன்றெழுத்து வார்த்தை.
கண்டுபிடியுங்களேன் !!!


இதன் -

ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது!
(க_தை)
முதலும், இடையும் முழுச் சொல்லின் சுருக்கம்!
(கவி_)
இடையும், கடையும் விவசாயிக்குத் தேவை!
(_விதை)
முதலெழுத்து முதல் தமிழெண்!
(க_ _)
கடையானது உழவரின் விழாக்காலம்!
(_ _ தை)
அதுதான்...
(க-வி-தை-)
!!!

குறிப்பு:
விடையை சரிபார்க்க இரண்டு வரிகளுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை 'செலக்ட்' செய்யவும்...
 
உபரிக்குறிபபு:
இது எனது பள்ளியிறுதியாண்டில் உருப்பெற்றது.

 

Thursday 28 June 2012

மனதை அதிரவைத்த காதல் கதை ♥!!!

 
ஒரு அழகான கிராமம். (எப்படிப்பட்ட அழகுன்னு தெரிஞ்சுக்க இங்க கிளிக்-குங்களேன்) அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்ணை யாரும் பார்த்ததும் இல்லை... கேட்டதும் இல்லை. அந்தப்பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. (ஏன் இந்த எதிர்ப்பு? தெரிஞ்சுக்க இங்க கிளிக்-குங்களேன்). இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒட தீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். 
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர். அதைப்பார்த்த காதல்ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர்மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

  
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப்பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.
திடீரென்று ஒருநாள்..
.
அப்பெண்ணின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக்கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்தநாள் அதே தேவதை அந்தப் பெண்ணின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன்பிறகே, அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்ணும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்தநாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.
  
அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது...,

 
"லூசாடி நீ!, ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்."


-0-0-0-0-0-0-
  
இதைப் படித்ததும் உடனே  என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! 
நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.
Untitled