
திருமண அழைப்பிதழ்.
மணமகள் இடம் - உன் பெயர்.
மணமகன் இடம் - வெற்றிடம்.
பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென
உரைக்கும் சித்தம் -
உன் தந்தையிடமிருக்கிறது!
அப்படியே என் வீட்டிலும்...!
இங்கு -
மணமகள் இடம் - வெற்றிடம்.
இருவரிடத்திலுமே...
பெற்றவர்கள் எண்ணியதை
முடிக்கும் பித்தம் முற்றியிருக்கிறது!
ஆனாலும்...
நாமிருவரும்...
நம்மிருவர் பெயரை இட்டால்மட்டும்
இன்னுமொரு யுத்தம் மிச்சமிருக்கிறது!
3 comments:
கலக்கீட்டீங்க சிசு, நானும் ஏதோ என்று எட்டி பார்த்தேன்.. பார்த்தால் கவிதை, ரொம்ப வித்தியாசமா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
தமிழ்த்தோட்டத்திற்கு என் நன்றிகள்...
நீங்கள் எதிர்பார்த்த அந்த "ஏதோ" ஒன்றிற்கு இன்னும் கொஞ்சகாலம் காத்திருக்கவேண்டும்...
சரி சரி
Post a Comment