Thursday 31 May, 2012

பந்தம் எப்போதும் தொடர்கதைதான்...



என் -  
தொப்புள் பந்தம்
தொட்டிலில் அழுகிறது.
பசியை அடக்க
பாய்ந்து வா என்று!

என் -
கட்டில் பந்தம்
கனவோடு காத்திருக்கிறது.
காமத்தீயை அணைக்க
காதல் நீராய் வா என்று!

என் -
கடமை பந்தம்
கர்ஜனையோடு விரட்டுகிறது.
இருக்கும் வேலைகளை
இயந்திரமாய் முடி என்று!

என் -
உரிமை பந்தம்
உலக்கையை இருக்கிறது.
கட்டிக்கொடுத்ததோடு
கடன் தொலைந்ததென்று!

என் -
மூளை பந்தம்
முணுமுணுக்கிறது வேதனையாய்.
நால்வரும் வேண்டும்...
நான் என்ன செய்யவென்று!




 

4 comments:

செய்தாலி said...

பந்தம்
ஒரு தொடர் கதைதான்
சேக்காளி


கவிதை ம்ம்ம்... அருமை

ஹேமா said...

தொப்புள் பந்தம்,கடமை பந்தம்,உரிமை பந்தம்....மூளை பந்தம்தான் தடுமாறித் தவிக்கும் !

முற்றும் அறிந்த அதிரா said...

பந்தத்தை வைத்தே அழகான கவிதை.. கலக்கிட்டீங்க.

இன்னுமொன்று பந்தம் என்பதற்கு இன்னொரு கருத்தும் இருக்கு.... தடியிலே துணி சுற்றி எண்ணெய் விட்டு எரிப்பது... அதுவும் பந்தம்தான்.. சுவாமிக்குப் பிடிப்பார்கள்..

Anonymous said...

நல்ல ஆதங்க கவிதை...மூளையை கழட்டி வைத்து இதயத்தோடு பயணிக்கவும்...