Wednesday 6 June, 2012

எனக்கு மட்டும் நான்!



சிவப்புமல்ல...வெளிருமல்ல...
பச்சைத் தமிழனின் கருப்பு நிறம்.

கலையாமல் வகிடெடுத்து
உருக்குலையாமல் படிந்த கேசம்.

முட்டையையும், சட்டத்தின்
ஓட்டையையும் நினைவுபடுத்தாத
ஆழமான விழிகள்.

நீளமுமல்ல...அகலமுமல்ல...
நேர்த்தியான நாசி.

காதோரம் வரை கிழியாமல்
அளந்தெடுத்த அதரங்கள்.

ஆணென்ற அடையாளத்திற்கு
அழகாய் அரும்பு மீசை.

பிரிவென்பதே இல்லாமல்
பிணைந்து இருக்கும் வளைபுருவங்கள்.

 என -

அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!

ஊசிக்குறிப்பு:  
பள்ளிப்பருவத்தின் விளிம்புகளில், என் தாழ்வுமனப்பான்மையில்  எழுதப்பட்டது இது.
பின்னாட்களில், நல்ல நண்பர்களாலும், புத்தகங்களாலும் அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இப்போது இந்த புகைப்படத்திலிருக்கும் கருத்துதான் எனதும்.

3 comments:

செய்தாலி said...

என்
சேக்காளியின்
அழகை சொல் என்று யாராவது கேட்டல்
நான் என்ன சொல்வேன் தெரியுமா

ஒளிவு மறைவற்ற
இந்த வெள்ளை மனதைத்தான் சொல்வேன்

Anonymous said...

கண்ணாடி தமிழனுக்காகவே கண்டுபிடித்ததென்பது உலகறிந்த விஷயம்...நீங்களும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல...Way to go...

முற்றும் அறிந்த அதிரா said...

கவிதை சூப்பராக இருக்கு.

//என -

அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!
///

நன்றாக இருக்கு.. ரசிக்கிறேன்.. பள்ளிக்காலத்தில் எழுதியதோ.. கற்பனை சக்தி அபாரம்தான்.