Tuesday 19 June, 2012

பார்த்தேன்...ரசித்தேன்...


மர இலைகளுக்கிடையே வழிதேடிய
ஒளிக் கீற்றுகளை ரசித்தேன்.

புல்லின் நுனியில் ஊஞ்சலாடும்
பனித்துளியை ரசித்தேன்.

விருந்தினர்போல் வந்துசெல்லும்
வானவில்லை ரசித்தேன்.

வான்வெளியில் விதைக்கப்பட்ட
முத்துக்களை ரசித்தேன்.

ஓசையில்லாமல் தேகம் தழுவும்
தென்றலை ரசித்தேன்.

வண்ணங்களைச் சுமந்துவரும்
வண்ணத்துப் பூச்சியை ரசித்தேன்.

மழலைகள் பேசும்
புரியாத மொழியையும் ரசித்தேன்.

இரவில் கண்ணாமூச்சியாடும்
மின்மினிகளை ரசித்தேன்.

எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!














நன்றிகள்: 
1. பட்டாம்பூச்சி படத்திற்காக... முத்துச்சரம் ராமலக்ஷ்மிக்கு.
2. மற்ற அனைத்திற்கும்...  கூகுள் ஆண்டவருக்கு.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அழகான ப்டங்கள்.

ஒவ்வொன்றிற்கும் அற்புதமான விளக்கங்கள்.

//எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!//

இணையில்லா இனிமை தரும் இறுதி வரிகள். பாராட்டுக்கள்.

செய்தாலி said...

//எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!//

இந்த
ரசனைகள் ஈடாகுமா
அந்த ....ரசனைகள்

Anonymous said...

சேர்ந்தும் ரசிங்களேன்...