Friday 15 June, 2012

மா கனல்கள் !



இந்திரனின்
இச்சைக்கு இணங்க...
நாங்கள் அகலிகைகளல்ல !
சிதையேறி
சிறந்தவளென நிரூபிக்க...
நாங்கள் சீதைகளுமல்ல !

மாதவியிடம் மயங்கிய
கோவலனை மன்னிக்க...
நாங்கள் கண்ணகியுமல்ல !
ஐவர் தலைவன்
அவையில் சூதாட...
நாங்கள் பாஞ்சாலியுமல்ல !

அடிமைத்தளையகற்றி,
தன்மானங்காக்க...
புரட்சிக் கொடியேந்தி வரும்
நாங்கள் -
மா கனல்கள் !

ஊசிக்குறிப்பு : 
1990-களின் இறுதியில், எனது கல்லூரிப் பருவத்து வரிகள் இவை.


9 comments:

Anonymous said...

மா கனல்கள் தான்...

Anonymous said...

கல்லூரிப் பருவத்து வரிகள்//

என்றும் பொருந்தும்...

Yaathoramani.blogspot.com said...

படத்துடன் கவிதை வரிகளைப் படிக்க
இரத்தத்தில் கொஞ்சம் சூடேறியது நிஜம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

நாங்கள்.. அகலிகை தான்:)
சீதைதான்:) கண்ணகிதான்:) பாஞ்சாலிதான்..:), மா கனல்களும் நாங்களே..... ஹா..ஹா..ஹா.. கவ் இஸ் இட்....?:))))

உண்மையில் அழகிய கவிதை... கற்பனையின் அபாரத்தை என்னவெனச் சொல்வது ரசிக்கிறேன்ன்ன்... ஆனா படிக்கும்போது இருந்ததைவிட, இப்போ கிட்னிப் பவர் குறைஞ்சுபோச்சோ?:)))

ஹையோ ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சொன்னேன்.. கோச்சிடாதிங்கோ.. நான் உப்பூடித்தான்:)))

செய்தாலி said...

சேக்காளி

சூடேறிய குருதியும்
புடைத்த நாளாங்கள்
கலூரி பருவத்தில் காணாலாம்
நிறை சே குவர வை

புரட்சி வெடிக்கும் வரிகள்
கடந்த காலத்தில் என் சேக்காளியும் ஒரு சே குவரா தான் போல

சிசு said...

@ ரெவெரி

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகா...

சிசு said...

@Ramani

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி ஐயா... கொஞ்சம் சூடான தருணத்தில் எழுதியதுதான் அது. :)

சிசு said...

@athira

ஹா...ஹா... உங்கள் பெயரை பின்னூட்டத்தில் பார்க்கும் போதே உற்சாகம் கொள்கிறேன்...

//இப்போ கிட்னிப் பவர் குறைஞ்சுபோச்சோ?:)))// கர்ர்.ர்.ர்ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்

நன்றி சகோ... தங்கள் தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும்....

சிசு said...

@செயதாலி

வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல சேக்காளி...

//கடந்த காலத்தில் என் சேக்காளியும் ஒரு சே குவரா தான் போல//

இப்போதும் அப்படித்தான் சேக்காளி....