அவளோடு பேசிக் கொண்டிருந்தேன் 
எதைப் பற்றியோ…
அவ்வப்போது அவளும் சிரித்தாள். 
திடீரென தலைசாய்த்து 
கடைக்கண்ணால் என்னைக் கவனித்தாள். 
அந்தப் பார்வை என்னவெல்லாமோ என்னுள் உணர்வுகள் தூவ,
மெல்ல எழுந்து அருகில் வந்தாள்…
உதடுகளை ஈரமாக்கினேன் நான்.
சட்டென்று என் நாடியை தாங்கினாள். 
கண்களை இறுக்க மூடினேன்.
என்ன செய்யப் போகிறாளோ?
எதிர்பார்ப்பு என்னுள்.
எதிர்பாராத தருணத்தில் –
அவள் கைக்குட்டை எடுத்து துடைத்து விட்டாள் 
என் தலையில் கிடந்த காகத்தின் அட்சதையை…!
No comments:
Post a Comment