
எழுதுகோல் எடுக்கும் எல்லோருமே
பிள்ளையார் சுழியில்தான்
பெரும்பாலும் தொடங்குகிறார்கள்.
நான் மட்டும் உன் பெயரில்!
புத்தகக் கண்காட்சி...
பிடித்த நூல் எதுவெனக் கேட்கிறாய்?
எப்படி சொல்வேன்?
நேற்றைய சந்திப்பில், உனக்கு தெரியாமல்
உன் துப்பட்டாவிலிருந்து உருவிய
வெளிர் நீல நூல்தான் என்பதை!
எல்லோரும் கோலம் போட்டு பூவை வைப்பார்கள்.
உன் வீட்டில் மட்டும் தான் -
கோலம் போடுவதற்கென்றே
ஒரு பூவை வைத்திருக்கிறார்கள்.
உன் தங்கையோடு உன்னை பார்த்தேன்...
பவுர்ணமியும் பிறையும் அருகருகே?
(ஆ ஆஆஆ... ஒண்ணுமில்லீங்க. காதை திருகினா கத்தாம என்ன பண்ணுவாங்க!)
No comments:
Post a Comment