
தீராத காதல்மழையின் துவக்க வரிகளாக
இருகரைகளிலும் கவிதை மேகங்கள்!
நீயா?நானா?
விழிக்கும், மனதிற்கும் காதல் சமர்;
காதல் பெரும்புனலில் கரைகள் கரைவதற்குள்
மனதின் மதகுகளை திறந்திடு சகியே!
நாகரிகம் கருதி நானும்;
நாணம் கருதி நீயும்
பேசாமல் பேசுகிறோம்!
உன் வழியில் நானும்;
என் வழியென நீயும் காத்திருந்தோம்;
நாம் சந்திக்கவேயில்லை;
காதல் நம்மை சந்தித்தது!
நான்
முத்தப்போருக்கு
அழைத்த போதெல்லாம்
நீ முகம் திருப்பிக்கொண்டாய்;
அன்று புரியவில்லை
நீ கன்னம்தான் காட்டுகிறாயென்று!
2 comments:
nalla anubavitha kavithai -
manikandan V
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மணி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment