
காதலில் –
பிரிவு நோய்க்கு மருந்தென்னவென்று
யாரேனும் சொல்லுங்களேன்.
அவள் வரும் திசையில்
ஒரு மாய பிம்பத்தோடு மல்லுக்கு நிற்கின்றன விழிகள்.
வார்த்தைகளை வைத்துக்கொண்டு
மனம் செதுக்கியது அவள் போன்ற அச்சுப்பதிவை.
இரவின் தனிமையில் -
பேனாவோடு கூட்டாட்சியில்…
மனதின் மறுபதிப்பாய் கவிதைகள்.
நான் எழுதிய கடிதமே கேட்கிறது
எப்போது என்னை அவள் வாசிப்பாளென?
காதலில் –
பிரிவு நோய்க்கு மருந்தென்னவென்று
யாரேனும் சொல்லுங்களேன்.
அவள் வராவிட்டாலும் பரவாயில்லை.
என்னை என்னிடமாவது விட்டு விடட்டும்.
No comments:
Post a Comment