Tuesday 6 July, 2010

திருவிழா


திருவிழாத் தாளங்கள் தெருவெங்கும் ஒலிக்க,
ஒன்றையும் அறியாமல், ஒருவருக்கும் தெரியாமல்
உன் விழியும் என் விழியும்
ஒன்றாய் கலந்தது இன்றும் நன்றாய் நினைவிருக்கிறது.

ஒரு மழைநாளின் மதியத்தில்,
உன் எதிர் வீட்டில் ஒதுங்க நேர்ந்தது.
அப்போது –
தாழ்வாரத்தில் வழிந்த துளி மழையை தவிர
உன் விழிக்கும் என் விழிக்கும் இடைஞ்சல்கள் ஏதுமில்லை.

ஒரு மஞ்சள் மாலை.
பேருந்து ஜன்னலின் வழியே உன் பார்வை வழிந்து,
என் மேல் விழுந்ததை நானும் அறிவேன்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேருந்து கிளம்பி புழுதி மறைத்தது.

காலச் சக்கரத்தில் ஆளுக்கொரு திசையாய்
நாம் சிதறிப் போனாலும்…

இப்போதும் ஈரமாய் இருக்கிறது
திருவிழாச் சட்டையில் நீ தெளித்த மஞ்சள்நீர் .

இன்றும்,
நகரத்து தெருக்களில் தாவணிகளைப் பார்க்கும்போதெல்லாம்
நகர விடாமல் செய்கின்றன உன் ஞாபகங்கள்.




3 comments:

Anandan.P (Tejas networks) said...

very very nice line

senthil.S said...

Romba Nallarukku Rombavum Nallarukku

சிசு said...

நன்றி ஆனந்தன்...
நன்றி செந்தில்...