
உன்னால் என்னை நம்ப முடியவில்லை,
பிறகு என்னால் என்னை எப்படி நம்புவது?
தொலைபேசியில் கண்டபடி எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;
உன்னைத் தெரிந்தவர்களிடம் கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத துக்கமுமாக,
நாளெல்லாம் வெறுமையில் கரைகிறது!
உன் வெட்கம் என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும் வார்த்தை மட்டும் வரவேயில்லை!
உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி திரும்பி உன்னிடமே வருகிறேன்!
தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள் நீ எங்காவது போய்விடப் போகிறாய்!
4 comments:
super.. realy fantastic
very..................nice line
வருகைக்கும், கருத்துக்கும் ...
நன்றி ஆனந்தன்
நன்றி நடராஜ்
நன்றி முத்தையன்
தொடர்ந்து வாருங்கள்...
உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி திரும்பி உன்னிடமே வருகிறேன்.......
....உள்ளம் தொடும் வார்த்தை .
Post a Comment